விளையாட்டு

800 ஐத் தொடர்ந்து முரளிக்கு விழும் ஆப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 800 என்கிற பெயரில் படமாக எடுக்கிறார்கள். அந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பார் என்று அறிவித்து மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள்.

போஸ்டரை பார்த்தவர்கள் தமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக நடிக்கக் கூடாது, உடனே 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று விஜய் சேதுபதியிடம் தெரிவித்தார்கள்.

தமிழர்களின் துரோகி விஜய் சேதுபதி என்கிற ஹேஷ்டேக் நேற்று ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டானது. இந்நிலையில் தன் படத்தில் இருந்து விலகி விடுமாறு முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலகியுள்ளார்.

இதை பார்த்தவர்கள், முத்தையா முரளிதரன் சொல்லித் தான் அந்த படத்தில் இருந்து விலக வேண்டுமா, ஒரு துரோகியின் பேச்சை கேட்பீர்கள், தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்க மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்னும் சிலரோ, விஜய் சேதுபதி பஞ்சாயத்து ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்ததாக சன் ரைசர்ஸுக்கு இருக்கிறது வேடிக்கை. தமிழருக்கு சொந்தமான சன் ரைசரஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஒரு தமிழினத் துரோகி இருக்கலாமா?. உடனடியாக முத்தையா முரளிதரனை தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

 

Related posts

முறுக்கு மீசைக்கு ஆசைப்படும் டிராவிட்

wpengine

அயர்லாந்து சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

wpengine

பெங்களூர் அணியுடனான இந்த தோல்விக்கு இது தான் காரணம்

wpengine