ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

8 கிலோ கேரளா கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது!


யாழ். தபால் திணைக்களத்திற்கு முன்பாக 8 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞர்கள் இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.

மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த இருவரும் விற்பனை செய்வதற்காக குறித்த பகுதியில் நின்று தடுமாறிக்கொண்டிருந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சர்கரின் கீழான புலனாய்வு பிரிவினர் கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

28 மற்றும் 25 வயதுடைய இருவ இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் பின்னர் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உரிய நேரத்தில் பீட்சா கிடைக்கவில்லை! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

wpengine

கிழக்கு அரசியலின் இரு புள்ளிகள் சஜித்திற்கு ஆதரவு

wpengine

மஹிந்தவின் காணாமல் போன மோதிரமும் கிடைத்த விதமும்

wpengine