உள்நாட்டு செய்திகள்

600க்கும் மேற்பட்ட அன்னதான சாலைகள் பதிவு



(FASTNEWS|COLOMBO) – கடந்த வருடத்தை போன்று இந்த வருடத்திலும் பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை புனித நகரங்களை கேந்திரமாக கொண்டு பெரும் எண்ணிக்கையிலான அன்னதான சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜுன் மாதம் முதலாம் திகதி அன்னதான சாலைகளை பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இது வரையில் 660 அன்னதான சாலைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பொது மக்கள் சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மகிந்த பால சூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள அன்னதான சாலைகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடையாவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உடல் ஆரோக்கியத்திற்கு பொருத்தமான உணவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தான சாலைகள் ஏற்பாடு செய்துள்ள அமைப்புக்களிடம் தொகுதி பொறுப்பு சுகாதார உத்தியோகத்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளதுடன், இதற்கு மாறாக உணவு வகைகளை விநியோகிக்கும் தான சாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை வீரர்கள் மீதான லாகூர் தாக்குதல் – 2 பேர் விடுதலை…

wpengine

UPDATE- தயாசிறி ஜெயசேகரவுக்கு துணை அமைச்சரவைப் பேச்சாளர் பதவி..

wpengine

கொவிட் முடிவுகளின் உண்மை நிலை

wpengine