உள்நாட்டு செய்திகள்

60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி மார்ச் முதல் வாரத்திலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படுமென எதிர்பார்ப்பதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் கொரோனா தடுப்பு அமைச்சின் ஊடகச் செயலாளர் துஷித்த ஜெயவர்தன தெரிவித்தார்.

மேலும் 9 மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தத் தடுப்பூசி முதலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படுவதுடன் பின்பு மற்றவர்களுக்கு வழங்கப்படும் என்று ஜெயவர்தன கூறினார்.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய 5 லட்சம் கொவிஷீல்ட் தடுப்பூசிகளின் விநியோகம் ஜனவரி 29இல் ஆரம்பமாகியமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்து கொள்ளும் திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி…

wpengine

சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய சிகரட் தொகையுடன் ஒருவர் கைது…

wpengine

மட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவைகள்

wpengine