ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

57 வயது பாட்டி செய்யும் தொழில்…



அழகும், இளமையும் இருந்தால் விமான பணிப்பெண்ணாக பணிபுரியலாம் என்னும் பரவலான கருத்தை தகர்த்தெறிந்திருக்கிறார் 57 வயது பாட்டி.

வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில் கேத்தரீன் ஹைன்ஸ் என்னும் இங்கிலாந்தைச் சேர்ந்த பாட்டி உலகைச் சுற்றிவரும் விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றுகிறார்.

இவர் கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்து இந்த விமானத்திற்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டிருந்தார். எனினும், தனது விருப்பமான பணிப்பெண் பணியை கொஞ்சம் தாமதமானாலும் தற்போது செய்ய துவங்கியுள்ளார்.

மார்க்கெட் பறிபோன ஹாலிவுட்டின் மூத்த நடிகைகள் முதுமையால் ஒதுக்கப்படுவதை பற்றி புலம்பி வரும் நிலையில் ஹைன்ஸ் பற்றிய செய்தி தற்போது பல பேரிளம் பெண்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளிப்பதாக உள்ளது.

இந்த விமான நிறுவனத்தின் பணிப்பெண்கள் தேவை என்ற விளம்பரத்தைக் கண்ட சுமார் 2000 பேர் 48 மணி நேரத்தில் விண்ணப்பித்தனர். அப்படிப்பட்ட மவுசு வாய்ந்த இந்த பணியில், 57 வயது பாட்டியான கேத்தரீன் ஹைன்ஸ் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தீபிகாவுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்…

wpengine

அரச தலையீட்டில் ஊடக சந்திப்பு இரத்து

wpengine

CMC ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகளால் பாலியல் தொல்லை…

wpengine