உள்நாட்டு செய்திகள்

விஜயகலாவிடம் விசாரணைகளை மேற்கொள்ள சபாநாயகரிடம் கோரிக்கை…



பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் பொலிஸார் அனுமதி கோரியுள்ளனர்.

அண்மையில் முன்னாள் அமைச்சர், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று கூறிய கருத்துத் தொடர்பாக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றது.

இந்நிலையில் பொலிஸார் தமது தரப்பு விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக இதுவரை 40 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், சபாநாயகரின் அனுமதியுடனேயே விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்பதால் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்குக் காவல்துறையினர் அனுமதி கோரியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

ஓழுக்காற்றுக் குழு முன்னிலையில் சனத் மௌனித்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் – துமிந்த

wpengine

இலங்கை அரசியலில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நாமல் புகைப்படம்!

wpengine

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி அணைக்குழு முன்னிலையில் ஆஜர்..

wpengine