உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஞானசார தேரர் ஜப்பான் பயணிக்கவில்லை – ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கை…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ ஜப்பான் விஜயத்தின் போது ஜப்பானில் அமைந்துள்ள இலங்கை பௌத்த விகாரை தலைமை தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பில் கலகொட அத்தே ஞானசார தேரர் பங்கேற்றிருப்பது குறித்து அண்மையில் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பிரசுரமான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்திற்கு முன்பதாகவே ஜப்பான் சென்றதாகவும், இலங்கை பௌத்த விகாரை தலைமை தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பில் தேரர் கலந்து கொண்டிருந்ததாகவும் குறித்த அறிக்கை தெர்வித்துள்ளது.

குறித்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றினைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதியுடன் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜப்பான் சென்ற செய்தி எவ்விதத்திலும் உண்மையில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை 

 

-Rishma

Related posts

ரயில்வே சேவைகள் மீள ஆரம்பம்

wpengine

கொரோனா : மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்று

wpengine

வெளிநாட்டில் தஞ்சமடைந்தவர்களுக்கு கடவுச்சீட்டுப் பெற புதிய சுற்றுநிருபம் வெளியீடு

wpengine