உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

500 மில்லியன் நட்டஈடு கோருகிறார் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ



பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாஸ ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு திருடன் என்றும் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா நேற்று(5) தெரிவித்திருந்தார்.

மேலும் பொன்சேகாவின் குறித்த இந்தக் கூற்று தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தனது சட்டத்தரணிகளின் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

இன்று 8 மணி நேர நீர்வெட்டு

wpengine

செனல் 4 வெளியிட்ட காணொளிகளில் நம்பகத்தன்மை இருக்குமானால் அதை எதற்காக நீக்க வேண்டும்..!

wpengine

அரசியல் தலைமைகளின் ஆளுமையை புடம்போடும் தேசியப்பட்டியல்!

wpengine