விசேட செய்தி

50 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து



அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்ட பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று காலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி பஸ் டயகம தலவாக்கலை பிரதான வீதியில் அக்கரப்பத்தனையிலிருந்து மெராயா பகுதியை நோக்கி செல்லும் போது அக்கரப்பத்தனை ஆகுரோவா பிரதேச பகுதியில் வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி பஸ்ஸில் பயணிகள் பயணித்திருக்கவில்லை எனவும், திருத்தப்பணிகளுக்காக சென்ற போது எதிரே வந்த வாகனத்திற்கு இடமளித்ததால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சாரதியும், நடத்துனரும் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களது ஆர்ப்பாட்டத்தினால் பதற்றநிலை..

wpengine

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோவுக்கு 05 வருட சிறை

wpengine

ஊடகத்துறை பிரதியமைச்சர் இராஜினாமா

wpengine