உலக செய்திகள்

5 மில்லியனை கடந்தது கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | பிரேஸில் ) – பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பிரேசிலில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 31404 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 5,002,357 ஆக அதிகரித்துள்ளது

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 148,304 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றினால் அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ள மூன்றாவது நாடாக பிரேசில் காணப்படுகின்றது.

Related posts

அமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்தது பலி எண்ணிக்கை

wpengine

கரீபியன் கடலினை அண்மித்த பகுதியில் நிலவிய நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை…

wpengine

துருக்கியினை துரத்தும் கொரோனா

wpengine