உலக செய்திகள்

5 ஆண்டுகளில் 5 லட்சம் பாகிஸ்தானியர் வெளியேற்றம்..



கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சத்து 44 ஆயிரத்து 105 பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் எழுத்து பூர்வமாக அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருவது, தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் இது குறித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் செனட்டர் ஜெகன்செப் ஜமால்தினி கேள்வி எழுப்பியமைக்கு உள்துறை அமைச்சகம் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளது.

இவர்கள். இந்தியா, லாவோஸ், தோசோ, போர்ட்லூயில், லைபீரியா, கினியா, புருண்டி,மடகஸ்கர், மலாவி, காங்கோ, டொமினிக் குடியரசு, மொசாம்பிக், அங்கோலா மற்றும் எத்தியோப்பியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய என 134 நாடுகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அதிக பாகிஸ்தானியர்கள் வெளியேற்றிய நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், மலேசியா, இங்கிலாந்து, துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் இருந்து அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து 49 பேர் வெளியேற்றப்பட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவரங்கள் (LIVE)

wpengine

50 ஆண்டு பகைக்கு முற்றுப்புள்ளி வைத்து கியூபா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம்…

wpengine

mickey mouse, minnie mouse பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட சுற்றுலா பயணிகள்

wpengine