விளையாட்டு

போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவுக்கு தடை..



போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 5 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பானிஷ் சூப்பர் கிண்ணத்தில் மெஸ்ஸியின் பார்சிலோனா அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோவின் ரியல் மாட்ரிட் அணி 3-1 என வெற்றிப் பெற்றது. போட்டியில் இரண்டாவது கோல் அடித்த ரொனால்டோ தனது ஜெர்சியை கழற்றி கொண்டாடினார்

இதனையடுத்த போட்டியின் போது விதிமுறைகளுக்கு புறம்பாக விளையாடியதாக நடுவரால் சிகப்பு அட்டை காட்டி, ரொனால்டோ வெளியேற்றப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரொனால்டோ நடுவரை கையால் தள்ளினார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம், அபராதத் தொகையுடன் ஐந்து போட்டிகளில் விளையாட அவருக்கு தடைவிதித்தது. குறித்த இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ரொனால்டோவுக்கு 10 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

(rizmira)

Related posts

183 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இலங்கை அணி சுருண்டது..

wpengine

இலங்கையுடனான பயிற்சி போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி…

wpengine

இங்கிலாந்தில் சர்ரே அணியில் அசத்தும் சங்கா.. (VIDEO)

wpengine