உள்நாட்டு செய்திகள்

40 ரூபா விலை கொண்ட அதிர்ஷ்ட இலாப சீட்டு விரைவில் அறிமுகம் – ரவி



20 ரூபா அதிர்ஷ்ட இலாப சீட்டுக்கு மேலதிகமாக விரைவில் 40 ரூபா விலை கொண்ட அதிர்ஷ்ட இலாப சீட்டை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று(25) நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

20 ரூபா என்ற விலையிலும் 40 ரூபா என்ற விலையிலும் இனிவரும் காலத்தில் அதிர்ஷ்ட இலாப சீட்டுக்களை விற்பனைச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

40 ரூபா விலை கொண்ட அதிர்ஷ்ட இலாப சீட்டுகள் வெற்றி பெறுவதற்காக அதிக வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

இங்கிலாந்து – இலங்கை போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமம் MTV தொலைக்காட்சி அலைவரிசைக்கு…

wpengine

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

wpengine

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 375 முறைப்பாடுகள் பதிவு

wpengine