உலக செய்திகள்

4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் தீ விபத்து – 7 சிறுவர்கள் உயிரிழப்பு…



சிரியாவில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியா தலைநகர் டமாஸ்கசின் மத்திய பகுதியில் உள்ள மனாக்லியா என்கிற இடத்தில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் 7 பேர் இருந்துள்ளனர்.

கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியதனால் சிறுவர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டெக்சாஸ் விமான நிலையத்தில் விமானம் விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு

wpengine

சீனத் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து – இதுவரை 17 பேர் பலி

wpengine

பிரான்ஸ் தேர்தலில் பெரும்பான்மையை நோக்கி மக்ரோனின் கட்சி..

wpengine