உள்நாட்டு செய்திகள்

35 வயதிற்கு குறைவு எனின் முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை…



35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை செய்யப்பட்டு அது தொடர்பான சட்டம் தற்போது தயாராகி வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இளைஞர்கள் அதிகமாக முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலுக்கு வருவதனை தடுக்கும் நோக்கில் குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார்.

பயணிகள் தங்கள் போக்குவரத்திற்கு அதிகமாக முச்சக்கரவண்டிகளையே பயன்படுத்துகின்றார்கள். இலங்கையில் 8 இலட்சத்திற்கும் அதிகமாக முச்சக்கரவண்டிகள் உள்ளது.

தற்போது பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பு கருதி புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்நாட்களில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

ரணில், பசில் இடையே இரகசியப் பேச்சு நடைபெற்றதா..?

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப் பத்திரங்கள் ரூ.2 கோடி’க்கு விற்பனை – ஜேவிபி குற்றச்சாட்டு..

wpengine

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்…

wpengine