உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீளவும் ரங்கன ஹேரத் முன்னிலையில்..


ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தலில் இலங்கை அணி வீரர் ரங்கன ஹேரத் மீண்டும் நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.

ஐ.சி.சி யினால் நேற்று(04) வெளியிடப்பட்ட தரப்படுத்தலின் அடிப்படையில் அவர் இந்த இடத்தை பிடித்துள்ளார்.

சிம்பாப்வே அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கட்டுக்களை கைப்பற்றிய நிலையில் ரங்கன ஹேரத் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

தரப்படுத்தலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலாம் இடத்தில் உள்ளார்.

2வது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் டி. டப்ளியூ. ஸ்டெய்ன் உள்ள அதேவேளை, 3ஆம் இடத்தில் இங்கிலாந்தின் ஜே எம் என்டர்ஷன் உள்ளார்.

Related posts

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் ஹெரோயினுடன் கைது

Azeem Kilabdeen

கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள்

wpengine

ஊரடங்கு சட்டத்தை மீறிய 9028 பேர் கைது

wpengine