உள்நாட்டு செய்திகள்

30 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது…



(FASTNEWS-COLOMBO) சட்டவிரோதமான முறையில் 04 தங்க பிஸ்கட்களை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று(25) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து 30 லட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் நிறையுடைய 04 தங்க பிஸ்கட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் சென்னை நகரில் இருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் குறித்த சந்தேக நபர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

கொழும்பு,கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள துடன், சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்று

wpengine

ஜெக்குலின் பெர்னாண்டஸுக்கு இலங்கையில் வீடு கொள்வனவு..!

wpengine

ஊதிய முரண்பாடு தொடர்பிலான ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம்…

wpengine