உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

30 அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவிற்காக 117 கோடி ரூபாய் நிதி கோரல்



அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் 30 பேரின் வாகன கொள்வனவிற்காக 117 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது.

குறித்த நிதியினைக் கோரி துணை மதிப்பீடு பத்திரமொன்று நிதி அமைச்சரின் சார்பாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க நேற்றையதினம்(07) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு அதிக நிதி கோரப்பட்டுள்ளதாகவும், குறித்த துணை மதிப்பீடு மூலம் அமைச்சர் சரத் பொன்சேகா 7 கோடி ரூபாய் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சில அமைச்சர்களுக்கு இரண்டு வாகனங்களுக்கான கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த  மதிப்பீட்டு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தகவல் அறிந்துகொள்ளும் சட்ட மூலம் தொடர்பில் விசேட செயலமர்வு

wpengine

கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

wpengine

காணாமல்போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை – அமைச்சரவை உபகுழு நியமிக்க நடவடிக்கை…

wpengine