Top Story 2உள்நாட்டு செய்திகள்

3.3 பில்லியன் ரூபா செலவில் “மிராக்கல் டோம்” கட்டடம்; ஜெரோம் பெர்ணான்டோவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  

பௌத்த மதம் உட்பட ஏனைய மதங்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளதாக கூறப்படும் போதகர் ஜெரோம் பெர்ணான்டோ ஆன்மீக கூட்டங்களை நடத்தும் “மிராக்கல் டோம்” என்ற கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு 3.3 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாகவும், அந்தளவு பாரிய தொகை அவருக்கு எவ்வாறு கிடைத்துள்ளது என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்த்தன உயர் நீதிமன்றத்தில் வைத்து நேற்று தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, அவரது ஆன்மீக தலைவராகக் கருதப்படும் “ஊபர்ட் ஏஞ்சல்” என்பவர் சிம்பாப்வே நாட்டில் நிதி முறைகேடு மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி தங்க விற்பனை தொடர்பிலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாரென்பதையும் அவர் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அவரது செயற்பாடுகள் 14 நாடுகளில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு

wpengine

மல்வானை காணி விவகாரம் – பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

மேற்கொள்ளவுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான புதிய செயற்திட்டத்திற்கு சாரதிகள் மத்தியில் எதிர்ப்பு.

wpengine