உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

3வது ஒருநாள் போட்டியில் ஆஸி அணிக்கு வெற்றி..



தம்புள்ளையில் நேற்று(29) நடைபெற்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் 226 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. தினேஷ் சந்திமால் 130 பந்துகளில் 102 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

தனது இறுதி சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய திலகரட்ன டில்ஷான் 65 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் அடம் ஸம்பா 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 46 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஜோர்ஜ் பெய்லி 99 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பெற்றார்.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் அவுஸ்திரேலியா 2:1 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது.

 

sl

aus

Related posts

கூகுள் இலங்கையுடன் கைகோர்க்கின்றது

wpengine

பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு விஷேட வேலைத்திட்டம்…

wpengine

வடமாகாண வைத்தியர்களும் நாளை(02) வேலைநிறுத்தப் போராட்டத்தில்…

wpengine