உள்நாட்டு செய்திகள்

29 தங்க பிஸ்கட்டுக்களுடன் இருவர் கைது…


சட்டவிரோதமான முறையில் 29 தங்க பிஸ்கட்களை இலங்கைக்கு எடுத்து வந்த வியாபாரி இருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரும் டுபாயில் இருந்து பொருட்களை எடுத்து வரும் வியாபாரிகள் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 7.30 மணியளவில் டுபாய் நாட்டிலிருந்து வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 226 என்ற விமானத்தில் குறிப்பிட்ட இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 2 கிலோ 900 கிராம் எடை கொண்ட 29 தங்க பிஸ்கட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 7 பேர் கைது..!

wpengine

பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை..!

wpengine

கிபிகல பிரதேசத்தில் தாயும் மகளும் கொலை…

wpengine