உள்நாட்டு செய்திகள்

25,000 ரூபா தண்டப்பணத்தில் மாற்றம்..


போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிரான 25,000 ரூபாய் அபராதத் தொகையில் இரு திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று(03) காலை தனியார் பஸ் சங்கங்கள் சில ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய இடது பக்கத்தால் முந்திச் செல்வது மற்றும் வேகம் தொடர்பில் 25,000 ரூபாய் அபராதத் தொகையை நடைமுறைப்படுத்தாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க பல சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த குழு எதிர்வரும் 5ஆம் திகதி முதல் செயற்படும் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை ஜனாதிபதியுடன் இன்று காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாகவும், வேலை நிறுத்தப் போராட்டத்தை முழுமையாக நிறுத்துவதாகவும் தனியார் பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன

Related posts

பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பிய நபர் கைது

Azeem Kilabdeen

மூதூர் தளவைத்தியசாலை குறித்து மூதூரில் ஆர்ப்பாட்டம்

wpengine

சாதாரண தரப் பரீட்சை எழுதிய பரீட்சாத்திகள் 05வரின் பெறுபேறுகளை இரத்து செய்ய நடவடிக்கை…

wpengine