உள்நாட்டு செய்திகள்

24 மணிநேர நீர் விநியோகம் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று(08) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமிப்பு சபை தெரிவித்துள்ளது.

வத்தளை, பேலியகொட, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கம்பஹா, ஜா-எல ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் ரத்துபஸ்வல, இம்புல்பே ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

களனி ஆற்றின் தெற்குக் கரை அபிவிருத்தியின் இரண்டாம் கட்ட செயற்றிட்டத்திற்காக இவ்வாறு கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமிப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் கணக்காய்வாளர் கைது…

wpengine

லண்டனில் உயிரிழந்த, ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணத்தில் எவ்வித சந்தேகமுமில்லை..

wpengine

விசாரணைகளை தொடங்கியது இலங்கை கிரிக்கெட் வாரியம்

wpengine