உள்நாட்டு செய்திகள்

22ம் திகதி வேலை நிறுத்தம் செய்ய தயாராகும் தபால் ஊழியர்கள்



(FASTNEWS|COLOMBO) – எதிர்வரும் 22ம் திகதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக தபால் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் திகதியில் இருந்து 22ம் திகதி வரை தொடர்ச்சியான வேலை நிறுத்தம் செய்திருந்ததாகவும், அதன்போது தீர்வு வழங்கப்பட்ட போதிலும் அது இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என்று சங்கத்தின் பிரதான செயலாளர் எச்.கே. காரியவசம் கூறியுள்ளார்.

ஒரு வருடத்தை கடந்துள்ள போதிலும் சம்பள ஆணைக்குழுவால் சரியான அறிக்கை இதுவரை முன்வைக்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 15ம் திகதி தபால் மா அதிபருடன் கலந்துரையாடலில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 22ம் திகதி சுகயீன விடுமுறை செய்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக எச்.கே. காரியவசம் கூறியுள்ளார்.

Related posts

தென் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கும் விமானங்கள் பறக்கவும் 13ம் திகதி தடை

wpengine

மஹிந்த, பசில் ஜூலை 28 வரை நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை

wpengine

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்…

wpengine