Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

21 இற்கு பச்சைக்கொடி காட்டிய பசில்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அரசமைப்பின் 21ஆவது திருத்தத்துக்குத் தாமும் ஆதரவளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.

இதேவேளை, 21ஆவது அரசமைப்பு திருத்தத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திருத்தம் உங்களுக்காகக் கொண்டுவரப்படுகின்றதா என பசிலிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது,  “காய்க்கின்ற மரத்துக்கே அதிகம் கல்லெறியப்படும் என்பது போல், வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் மற்றவர்களால் அதிக தடைகளைச் சந்திக்க நேரிடும் என அவர் கூறியதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.

Related posts

நிலவும் காலநிலையில் தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய அபாயம் – செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை..

wpengine

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும்

wpengine

கொலன்னாவ நகரசபைத் தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine