உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு



தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரையும் எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில், இன்று காலை ஆஜர்படுத்திய போது, சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரையும் தொடர்ந்தும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப்பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதணையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 2015ஆம் ஆண்டு சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நானுஓயா விபத்தினை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்..

wpengine

இந்திய – பாகிஸ்தான் கிரிகெட் போட்டி நடப்பது சாத்தியமல்ல – சர்தாஜ் அஜிஸ்

wpengine

முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

wpengine