உலக செய்திகள்

2024-ம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – 2024-ம் ஆண்டு நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்காக 3 வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருவதாகவும் கூறப்படுகின்றன.

நிலவில் முதன்முதலில் கால் வைத்த முதல் நபர் என்ற பெருமையை பெற்ற நீல் ஆம்ஸ்ட்ராங், அப்பல்லோ விண்கலம் மூலம் சென்று நிலவில் காலடி வைத்து 50-வது ஆண்டு நிறைவு விழாவை கடந்த ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி நாசா கொண்டாடியது.

இந்த நிலையில் நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டு இருக்கிறது. 2 விண்வெளி வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ள நாசா அவர்களில் ஒரு பெண் விண்வெளி வீராங்கனையை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்துக்கு 28 பில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மெக்ஸிக்கோ – கனேடிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து

wpengine

கருப்பின இளைஞர் கொலை சம்பவம்; அமெரிக்காவில் பதற்றம்

wpengine

மெக்சிகோ பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

wpengine