விளையாட்டு

2024 ஒலிம்பிக் போட்டியினை நடாத்த 5 நகரங்கள் போட்டி



உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சி ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

கடைசியாக 2012–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் நடந்தது. அடுத்த ஆண்டு (2016) ஆகஸ்டு 5ந் திகதி முதல் 21ந் திகதி வரை பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடக்கிறது.

2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் நடத்த உள்ளது. இந்த போட்டி ஜூலை 24ந் திகதி முதல் ஆகஸ்ட் 9ந் திகதி வரை டோக்கியோவில் நடக்கிறது.

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்த 5 நகரங்கள் போட்டியில் உள்ளன.

பாரீஸ் (பிரான்ஸ்), லாஸ்வேகாஸ் (அமெரிக்கா), ரோம் (இத்தாலி), ஹம்பர்க்( ஜெர்மனி), புடாபெஸ்ட் (அங்கேரி) ஆகிய நகரங்கள் விண்ணப்பித்துள்ளன. 2017ம் ஆண்டு பெரு தலைநகர் லிமாவில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் ஓட்டெடுப்பில் எந்த நகரம் போட்டியை நடத்தும் என்பது தெரிய வரும்.

இதில் லாஸ் ஏஞ்சல்சில் (1932, 1984), பாரீசில் (1900, 1924), ரோமிலும் (1960) ஏற்கனவே நடைபெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

நியூசிலாந்து பந்து வீச்சாளர்களிடம் இங்கிலாந்து அணி 58 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது…

wpengine

சங்காவின் 11 பேர் கொண்ட கனவு அணியினர் இவர்கள் தான்.. (பட்டியல்)

wpengine

இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி வீரர் அதிரடியாய் நீக்கம்…

wpengine