ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

2019ம் ஆண்டுக்கான உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு பாரிய பின்னடைவு



(FASTGOSSIP | COLOMBO) – 2019ம் ஆண்டுக்கான உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 5 இடங்கள் பின்னோக்கிச் சென்றுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு 67 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இவ்வாண்டு 5 இடங்கள் பின்நோக்கிச் சென்று 72 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

163 நாடுகளில் நாடுகளில் குறித்த ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து இந்த ஆண்டும் பட்டியலில் முதலிடத்தையும், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்திலும் உள்ளது. இதில் இந்தியா 141வது இடத்திலும் உள்ளது.

கடந்த ஆண்டு பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சிரியா தற்போது ஓரிடம் முன்னேறியுள்ளதோடு, பூட்டான் 15-ஆவது இடத்தைப் பிடித்து, தெற்காசிய நாடுகளில் அமைதி மிகுந்த நாடாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிபொருள் விலை அதிகரிப்பினால் மின் கட்டணமும் அதிகரிப்பு…

wpengine

superb மேற்கிந்திய தீவுகள் அணி IPL இலும் அசத்தித் தள்ளியது இப்படித்தான்..

wpengine

‘சாரா’ நாடகம் அரங்கேறுகிறதா?

wpengine