உள்நாட்டு செய்திகள்

2018 ஜனாதிபதி ஊடக விருது விழா இன்று(10)



(FASTNEWS | COLOMBO)- ஜனாதிபதி ஊடக விருது விழா இன்று(10) பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் உயர் அதிகாரிகளுடன் பெருமளவு ஊடகவியலாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இவ் ஊடக விருது விழாவில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள் ஆகியவற்றுக்கான 47 விருதுகள் மற்றும் 04 விசேட விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் ஊடகத்துறை அமைச்சருமான ருவன் விஜேவர்த்தனவின் தலைமையில் அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீரவின் வழிகாட்டலில் ஊடகத்துறை அமைச்சு குறித்த இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இரண்டு வருடங்கள் வகுப்பு தடை

wpengine

காட்டு யானைகளின் தாக்குதலுக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு…

wpengine

இராணுவ சிப்பாயின் துப்பாக்கி இனந்தெரியாதவரால் பறிப்பு

wpengine