உள்நாட்டு செய்திகள்

2017ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலிடும் பணிகள் நிறைவு..



2017ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலிடும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த இந்த பட்டியல் தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் அகற்றப்பட வேண்டிய பெயர் விபரங்கள் மற்றும் புதிதாக இணைக்கப்படும் பெயர் விபரங்கள் குறித்த கிராம சேவகர் அலுவலகங்களின் மூலம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர் புறங்களில் வாக்காளர் பட்டியலில் பெயரை இணைப்பது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2017 ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே அடுத்து வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் நிலையில், வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து பரிசோதித்துக் கொள்ளுமாறு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

 

(rizmira)

Related posts

சில்லறை மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி

wpengine

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் எதிர்வரும் 19ம் திகதி…

wpengine

வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் அமைச்சரவை அவதானம்…

wpengine