உள்நாட்டு செய்திகள்

2017ம் ஆண்டில் இடம்பெறவுள்ள பரீட்சைகளின் திகதிகள் வெளியீடு..



2017ம் ஆண்டில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியன நடைபெறும் காலம் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் திகதியும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 12ம் திகதி முதல் 21ம் திகதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி முதல் செப்டம்பர் 02ம் திகதி வரை இடம்பெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

வெலிக்கடை சிறைச்சாலைக் கைதிக்கு கொரோனா [UPDATE]

wpengine

பிரதமர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

wpengine

SLPP இனது தேர்தல் பிரசார செயற்பாடுகள் ஆரம்பம்

wpengine