உள்நாட்டு செய்திகள்

2017ஆம் ஆண்டில் வாகன விபத்துக்களினால் 3078 பேர் உயிரிழப்பு…



கடந்த 2017ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 935 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு குறித்த தேசிய சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் வீதி விபத்துக்களினால் 289 சைக்கிளோடிகள் உயிரிழந்துள்ளதுடன், வீதி விபத்துக்களினால் இடம்பெற்ற மரணங்களில் மூன்றில் ஒரு மரணங்கள் பாதசாரிகள் மற்றும் சைக்கிளோட்டிகளின் மரணங்களாக பதிவாகியுள்ளன.

இதேவேளை, வாகன விபத்துக்களில் 3078 பேர் உயிரிழந்த நிலையில் அதிகளவானவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கவனயீனமாக வாகனங்களை முந்திச் செல்லல், அதிக வேகம், வீதிப் போக்குவரத்து சமிக்ஞைகளை கவனத்தில் கொள்ளாமை, கவனயீனம் போன்ற காரணினால் இவ்வாறான மரணங்கள் அதிகளவில் சம்பவிப்பதாக வீதிப் பாதுகாப்பு குறித்த தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்

Related posts

தேர்தலின் நிமித்தம் இடைநிறுத்தப்பட்டிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பம்

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் சோதனை..

wpengine

சமுர்த்தி வங்கிகளை நவீனப்படுத்த நடவடிக்கை – எஸ்.பி

wpengine