உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

20 புதிய அமைச்சர்கள் இன்று(19) பதவிப்பிரமாணம்…



புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 20 பேர் இன்று(19) பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, எஞ்சிய அமைச்சர்கள் நாளைய தினம்(20) பதவிப்பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறே ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேஷன், ரிஷாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் அரசின் அமைச்சரவை அமைச்சுக்களை பொறுப்பேற்காதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

19ம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய தேசிய அரசு இல்லாதவிடத்து, அமைச்சரவைக் குழுவானது 30 ஆக வரையறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலை நூல்கள் தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை கண்டறிய மென்பொருள் அறிமுகம்..!

wpengine

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்திற்கு பின்னர் தீர்மானம் எட்டப்படும் – எஸ்.பீ…

wpengine

இன்று முதல் முடக்கப்படும் பகுதிகள்

wpengine