உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

20 ஓவர் உலகக் கோப்பையை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்



இந்திய கிரிக்கெட் அணி எங்களுடன் விளையாடாவிட்டால் ‘20 ஓவர் உலகக் கோப்பையை புறக்கணிப்போம்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது.

‘‘எங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்திய கிரிக்கெட் அணி (டிசம்பர்–ஜனவரியில்) விளையாட மறுத்தால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பையை நாங்கள் புறக்கணிப்போம்’’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீர் மிரட்டல் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, லாகூர் நகரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார்கான் அளித்த பேட்டியிலேயே, ‘பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடர்வதற்கான அனைத்துவித வாய்ப்புகளையும் இந்தியா தவிர்த்தால், அதன் பின்னர், பாகிஸ்தான் அரசின் அறிவுரையை கேட்டு அடுத்தகட்ட முடிவு எடுப்போம்.

அப்படியொரு சூழலில் இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டாம் என்றே எங்களது அரசு அறிவுறுத்தும் என்றே நான் நினைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் சி.ஐ.டி விசாரணை

wpengine

IPL 2016 – இறுதிப்போட்டி இன்று

wpengine

களு கங்கை பொங்கும் நிலையில்

wpengine