உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கைவிட்டது அரசு..



சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடாத்தல் உட்பட பல்வேறு திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் அரசினால் முன்வைக்கப்படவிருந்த 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்பொழுது குறித்த இச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கப் பெற வேண்டும் என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடாத்தப்பட வேண்டும் என நீதித் துறையினரால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனையடுத்தே குறித்த இத்தீர்மானம் பெறப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

குறித்த 20வது திருத்த சட்டமூலம் எதிர்வரும் புதன் கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

சுங்க அதிகாரிகளை தாக்கிய சம்பவம் – தம்பதியருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை…

wpengine

சப்ரகமுவ பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பம்…

wpengine

அசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று(22) சபைக்கு…

wpengine