உள்நாட்டு செய்திகள்

2 மணி நேரத்தினுள் டெங்கு பரிசோதனை பெறுபேற்றை வழங்குமாறு பிரதமர் கோரிக்கை..



டெங்கு நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு நடாத்தப்படும் இரத்தப் பரிசோதனையை 2 மணி நேரத்துக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனியார் வைத்தியசாலைகளின் பரிசோதனை நிலையங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரத்தப் பரிசோதனை அறிக்கை வழங்க 90 நிமிடங்களை அரச வைத்தியசாலைகள் எடுத்துக் கொள்கின்றன. தனியார் மருத்துவமனைகள் இதற்காக 8 மணித்தியாலங்களை எடுக்கின்றன.

நோயாளர்களை அவசரமாக இனங்கண்டு கொள்வதற்காக குறித்த இந்த பரிசோதனை நேரத்தைச் சுருக்கிக் கொள்ளுமாறு தனியார் மருத்துவமனைகளை பிரதமர் கேட்டுள்ளார். சுகாதார அதிகாரிகளின் மீறு பரிசீலனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

 

(rizmira)

Related posts

பொலிஸார் மீது மோதிய டிப்பர் கண்டுபிடிப்பு

wpengine

மூவருக்கு அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகள்

wpengine

கொவிட் – விஞ்ஞான ரீதியான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை

wpengine