Top Story 2உள்நாட்டு செய்திகள்

2 கிலோ ஹெரோயினுடன் நபரொருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லேரியா பொலிஸ் பிரிவின் உடமுல்ல பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை பொலிஸினால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுடன் இணைந்ததாக நேற்று (28) அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வீட்டொன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​2 கிலோகிராம் 218 கிராம் ஹெரோயின், போதைப்பொருள் வர்த்தகத்தில் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 667,000 ரூபாய் பணம், 3 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு கார் ஆகியவற்றுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லேரியாவையைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விசாரணையில், சந்தேக நபர் வெளிநாட்டில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டது தெரியவந்தது. கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது

Related posts

வஸீம் கொலையில் நாமலின் தொடர்பு உறுதி

wpengine

வடபகுதி நிலங்கள் இராணுவத்திற்கே சொந்தம் – பா.உ வீரக்குமாரவினது சர்ச்சைக்குரிய கருத்து..

wpengine

நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தி – அவசர ஊடகவியலாளர் சந்திப்புக்கு சீன தூதரகம் அழைப்பு…

wpengine