உலக செய்திகள்

02 கட்டிடங்கள் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…



(FASTNEWS|COLOMBO) பிரேசில் நாட்டில் ரியோ தி ஜெனெரியோ பகுதியில் 2 கட்டிடங்கள் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரேசில் ரியோ தி ஜெனெரியோ பகுதியில் கடந்த 12ம் திகதி 4 மற்றும் 6 அடுக்கு மாடிகளை கொண்ட 2 கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மீட்புப் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த கட்டிடங்கள் மேயரின் அனுமதியின்றி, கட்டுமான பணிகள் ஒழுங்கின்றி கட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இப்பகுதியில் இது போன்று 60 கட்டிடங்கள் முறையாக கட்டப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளன.

Related posts

‘நிகாப்’ ஆடைக்கு எகிப்து பாராளுமன்றம் தடை விதிக்கிறது..

wpengine

நவாஸ் ஷெரீப்பின் உயிரைக் குறிவைக்கின்றதா தீவிரவாதம்?

wpengine

கடும் மழை – வெள்ளத்தில் சிக்கி இதுவரை 110 பேர் உயிரிழப்பு

wpengine