உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வடக்கையும் ஆக்கிரமித்த ஞானசார தேரர்


கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் வடக்கிற்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கள கிராமமான கொக்கிளாய் – முத்துஆரம பகுதிக்கு சென்று அங்கு வசிக்கும் மக்களின் குறைகளை கண்டறிவதற்காகவே சென்றுள்ளதாக தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும், அங்கு வசிக்கும் சிங்கள மக்கள் அரச அதிகாரிகளாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் தவறாக வழிநடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கமையவே அதனை ஆராய்வதற்காகவே தாம் அங்கு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாரம்பரியமாக குறித்த நிலங்களுக்கு உரிமையாளர்களான தமது மக்களுக்கு அமைச்சர்களாலோ, அரச அதிகாரிகளாலோ இதுவரை எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் ஞானசார தேரர் குற்றஞ் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, குறித்த கிராமத்தில் 269 சிங்கள குடும்பங்கள் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவினால் மத்திய கிழக்கு நாடுகளில் 23 இலங்கையர்கள் பலி

wpengine

JVP குறித்த திவயின செய்திக்கு பொறுப்பான பிரதம ஆசிரியர் ராஜினாமா

wpengine

கல்முனையில் தனியார் பஸ் மீது கல் வீச்சு தாக்குதல்

wpengine