உள்நாட்டு செய்திகள்

18 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…


1 கிலோ கிராம் 513 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வெள்ளவத்தையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை கொழும்பு ஊழல் சுற்றிவளைப்பு பிரிவினரால் நேற்று வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து சுமார் 18 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோகிராம் 513 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

இன்றும், நாளையும் விசேட சுற்றிவளைப்புகள்

wpengine

பாதுகாப்பற்ற புகையிரத போக்குவரத்து கடவை பணியாளர்கள் பணி பகிஷ்கரிப்பில்..

wpengine

ஸ்மித் மற்றும் வார்னர் இற்கு வாழ்நாள் போட்டித்தடை…. ?

wpengine