உள்நாட்டு செய்திகள்

18 மாணவர்களை தாக்கிய ஆசிரியர் விளக்கமறியலில்…



(FASTNEWS | COLOMBO) – மட்டக்களப்பு – பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்விப் பயிலும் 18 மாணவர்களை தாக்கி காயப்படுத்தியமைக்காக கைது செய்யப்பட்ட ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் இன்று(14) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் எம்.எம்.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

வீட்டுப் பாடங்களை ஒழுங்காக செய்துவரவில்லை என்று தெரிவித்து குறித்த மாணவர்களை ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.

ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், சிலர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மேலும் பலர் நாடு திரும்பினர்

wpengine

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் இரண்டாவது கண்காட்சி இன்று

wpengine

பட்ஜெட் வேண்டாம்: தேர்தலே வேண்டும்! – ரணிலுடன் மோதத் தயாராகிறது மொட்டுக்கட்சி..!

wpengine