ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

17 வயது மகளை நிர்வாணமாக வீட்டினுள் பூட்டி வைத்திருந்த பெற்றோரை கைது செய்த பொலிசார் !!



பிரான்ஸ் நாட்டில் பெற்ற மகளை பலத்த காயங்களுடன் நிர்வாண நிலையில் கோமாவில் விட்ட குற்றத்திற்காக அவரது பெற்றோரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வடக்கு பிரான்ஸில் உள்ள Flers என்ற நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் பொலிசாருக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளது.

இந்த தகவலை தொடர்ந்து பொலிசார் புகார் கொடுக்கப்பட்ட வீட்டை அதிரடியாக சோதனை செய்துள்ளனர்.

வீட்டில் உள்ள அறை ஒன்றில் 17 வயதான இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பேச்சு மூச்சு இன்றி கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

விசாரணை நடத்திய போது பொலிசாரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டது அந்த இளம்பெண்ணின் தாயார் தான் என தெரியவந்துள்ளது.

உடனடியாக மருத்துவரை வரவழைக்கப்பட்டு அவரை பரிசோதனை செய்தபோது, அவரது இடுப்பிற்கு கீழ் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்த்ததையும் அவர் ‘கோமா’ நிலைக்கு சென்றுள்ளதையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக பெற்றோரிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

17 வயதான மகளை கவனிக்காமல், அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டு கோமா நிலைக்கு செல்லும் வரை பெற்றோர்கள் அஜாக்கிரதையாக இருந்துள்ளனர்.

இந்த குற்றங்களை அடிப்படையாக வைத்து பொலிசார் பெற்றோரை கைது செய்துள்ளனர்.

எனினும், 17 வயதான பெண்ணிற்கு என்ன ஆனது என்பது குறித்து எதுவும் தெரியவராத நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை முன்வைக்கவுள்ள அடிகள் தொடர்பில் மாவன் கருத்து…

wpengine

சத்திரசிகிச்சையின் பின் அகற்றப்பட்ட இரும்பு கம்பி (video)

wpengine

இலங்கை கிரிக்கெட் அணியினை சமூக வலைதளங்களில் விமர்சிப்போருக்கு மஹேலவிடம் இருந்து எச்சரிக்கை…

wpengine