உள்நாட்டு செய்திகள்

17 வயது சிறுமி துஸ்பிரயோகம்! 22 வயதுடைய பெண்ணின் தந்தை கைது: வெளிவந்த பின்னணி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  திருகோணமலை மாவட்டத்தில் நாமல் வத்த பகுதியில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 22 வயதுடைய பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் தர்சினி அண்ணாத்துரை முன்னிலையில் குறித்த நபரை முன்னிறுத்திய போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

குறித்த நபர் குடும்ப தகராறு காரணமாக மது போதையில் மனைவியை தாக்கிய நிலையில் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் பக்கத்து வீட்டு 17 வயதுடைய சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் மேற்கொண்டார் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பெண்ணின் தந்தை எனவும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

விஷேட சுற்றிவளைப்பில் 32 பேர் கைது…

wpengine

பேருவளை பகுதியில் ஹெரோயினை விநியோகம் செய்ய பயன்படுத்திய படகின் உரிமையாளர் கைது…

wpengine

சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடியில் அரசுக்கு சுமார் 1,000 கோடி நட்டம்..

wpengine