உள்நாட்டு செய்திகள்

160 புகையிரத பெட்டிகளை இலங்கைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து…


160 புதிய புகையிரத பெட்டிகள் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் நேற்று கையொப்பமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் கடன் நிவாரண திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை கொள்வனவு செய்வதற்காக 82.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட உள்ளது.

மேலும், இவற்றை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் அந்த புகையிரத பெட்டி தயாரிப்பு நிறுவனத்தின் பணிப்பாளருக்கு இடையில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

இவை நவீன வசதிகளை கொண்டதாக அமைய உள்ளதுடன், எதிர்வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் அவை பயணிகள் போக்குவரத்துக்கு இணைத்துக் கொள்ளப்பட உள்ளது.

Related posts

சமூக இடைவௌியை பேணாதவர்களை கைது செய்ய நடவடிக்கை

wpengine

விசேட பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு

wpengine

தபால் மூல வாக்களிப்பு; விண்ணப்பங்கள் நாளை முதல்

wpengine