உள்நாட்டு செய்திகள்

16 மணி நேர நீர்வெட்டு அமுலுக்கு..



பம்புக்குளிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் செய்யப்படவுள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் 02ம் திகதி 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நீர்கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள், துவ பிட்டிபத்த பிரதேசம், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் படை முகாம், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் உள்ளிட்ட பகுதிகளில் குறித்த இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 02ம் திகதி திங்கட்கிழமை காலை 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 03.00 மணிவரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி அழைப்பு உரையாடல்களது பதிவு CID’யிடம்..

wpengine

இளைஞர்கள் 11 பேர் கடத்தல் விவகாரம் – வழக்கு ஒத்திவைப்பு

wpengine

கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைகுழு முன்னிலையில்..

wpengine