ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

15 வயது மாணவி 17 வயது கணவருடன் பொலிஸில் சரண்



காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பதினைந்து வயது நிரம்பிய மாணவி, மூன்று மாதங்களுக்குப் பின்னர் தமது கணவருடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளர்.

இச்சம்பவம் ஊவா – பரணகமையில் 05.04.2016 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.

பாடசாலை சென்று, குறிப்பிட்ட மாணவி வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் ஊவா – பரணகமைப் பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 26ந் திகதி முறைப்பாடு செய்துள்ளனர்.

இம் முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டிருந்த வேளையில், மூன்று மாதங்களுக்குப் பின்னர் காணாமல் போனதாக குறிப்பிடப்படும் மாணவி, தனது கணவனுடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இவ் இருவரும் இள வயதுகளை உடையவர்களென்பதும், அவர்கள் விசாரனையின் பின்னர் வெலிமடை நீதவான் நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்றும், பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவிக்கு 15 வயது அவரது கணவனுக்கு 17 வயது என்றும் தெரியவந்துள்ளது.

Related posts

பாணின் விலையை குறைக்க வாய்ப்பு இல்லை

wpengine

அப்பாவிற்கு மாரடைப்பு .. லண்டன் விரைந்தார் எமி ஜாக்சன்

wpengine

இராஜாங்க அமைச்சர்கள் பலர் இராஜினாமா..?

wpengine