உள்நாட்டு செய்திகள்

15ம் திகதிக்கு தனியார் பேரூந்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக கெமுனு அறிவிப்பு..


கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலுக்கு எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் தீர்வு பெற்றுத்தர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு, தீர்வு கிடைக்காவிடின் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலை வேளையில் நிலவும் வாகன நெரிசலால் பேரூந்து பயணிக்கும் வேகம் மணித்தியாலத்திற்கு நான்கு கிலோமீற்றர்கள் வரை குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அச்சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன, அவசர சந்தர்ப்பங்களில் இதனை விட பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து சில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள போதும், எந்தவொரு பதிலும் இதுவரை இல்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

கட்டான கொள்ளைச் சம்பவம் : 05 பேர் கைது

wpengine

தொடர் சர்ச்சையில் ‘சீன உரம்’

wpengine

திருகோணமலை தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்..

wpengine