உள்நாட்டு செய்திகள்

142 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…



(FASTNEWS|COLOMBO) மதவாச்சியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த காரிலிருந்து கேரள கஞ்சாவுடன், இருவர் நேற்று(22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காரிலிருந்து 142 கிலோ 812 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புகளில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கஞ்சாவைக் கொண்டுசென்ற கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் குணசிங்கபுர மைதானத்தில்!

News Editor

ஸ்ரீ.பொ.பெரமுன உறுப்பினர்கள் 152 பேரும் இன்று முன்னாள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்…

wpengine

ரவி உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனை

wpengine