திருச்சி சமயபுரத்தை சேர்ந்தவர் அமீர் பாஷா. இவரது மகன் சேஷ் அப்துல்லா(24). இவருக்கும் 7வது படிக்கும் 14 வயது சிறுமிக்கும் நேற்று காலை கோட்டை பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில் குழந்தை திருமணம் நடப்பதாக திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக திருமண மண்டபத்திற்கு விரைந்து வந்த சமூக நலத்துறை அதிகாரிகள் சிறுமியின் வயது சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். அப்போது அவரின் வயது 14 என உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து அமீர்பாஷா, இவரது மனைவி அமீனா பேகம், மகன் சேஷ்அப்துல்லா, சிறுமியின் தாய் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்
previous post
wpengine
This is the "wpengine" admin user that our staff uses to gain access to your admin area to provide support and troubleshooting. It can only be accessed by a button in our secure log that auto generates a password and dumps that password after the staff member has logged in. We have taken extreme measures to ensure that our own user is not going to be misused to harm any of our clients sites.